......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 10 January 2013

பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்லலாமா?

மெளலவி ஸஹ்றான்(மஸ்ஊதி)
பிரச்சாரகர் தாருல் அதர் அத்தஅவிய்யா)
முஸ்லிம் சமூகத்தில் கைவிடப்பட்ட ஸுன்னாக்களில் ஒன்றே பெண்கள் பள்ளிக்கு வருகை தரும் ஸுன்னா ஆகும்.அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்)அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிவாயலுக்கு தொழுகை உட்பட பல்வேறு நிகழ்வுகளுக்கும் சென்று கலந்து கொண்டுள்ளார்கள் என்பதற்கான சான்றுகள் ஹதீஸ் கிரந்தங்களில் நிறைந்திருப்பதைக் காணமுடிகின்றது.

‘கலாச்சாரங்களில் சிறந்த கலாச்சாரம் தூதர்(ஸல்)அவர்களி கலாச்சாரம் மட்டுமே’என நபிகள் நாயகம்(ஸல்)அவர்களே எமக்குப் போதித்துத் தந்திருக்க அதைப்புறக்கணித்து விட்டு மத்ஹபுகளையும்இபெரியார்களையும் அச்சொட்டாகப் பின்பற்றும் சகோதரஇசகோதரிகள் இவ்விடயத்தில் தமது நிலையை ஒரு முறை எண்னிப்பார்க்க வேண்டும்.பெண்கள் பள்ளிவாயலுக்கு வந்து தொழுவதை அல்லாஹ்வுடைய தூதர் அங்கீகரித்திரிக்கின்றார்கள் என்பதற்கு பின்வரும் நபிமொழிகள் சிறந்த சான்றாகும்.
أخبرنا محمد بن يوسف ثنا الأوزاعي حدثني الزهري حدثني عروة عن عائشة قالت كن نساء النبي صلى الله عليه وسلم يصلين مع النبي صلى الله عليه وسلم الفجر ثم يرجعن متلفعات بمروطهن قبل أن يعرفن(رواه البخاري)
முஃமினான பெண்கள் தங்களை ஆடைகளால் போர்த்திக்கொண்டு நபி(ஸல்)அவர்களுடன் பஜ்ருத்தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தார்கள்.தொழுகை முடிந்ததும் தங்கள் இல்லங்களுக்குத் திரும்புவார்கள்.இருட்டின் காரணத்தால் அவர்களை ஒருவரும் அறிந்துகொள்ள முடியாது.
அறிவிப்பாளர்:ஆயிஷா(ரலி)
நூல்:ஸஹீஹுல் புஹாரி
ஹதீஸ் இலக்கம்:578
حدثنا عبد الرحمن بن إبراهيم، ثنا عمر بن عبد الواحد وبشر بن بكر، عن الأوزاعي، عن يحيى بن أبي كثير، عن عبد اللّه بن أبي قتادة، عن أبيه قال:
قال رسول اللّه صلى الله عليه وسلم: ‘إني لأقوم إلى الصلاة وأنا أريد أن أطول فيها فأسمع بكاء الصبي فأتجوز كراهية أن أشق على أمه’.(رواه البخاري)
நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையை துவக்குவேன்.அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்பேன்.(எனக்குப் பின்னால் தொழுது கொண்டு இருக்கும்)அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கி முடித்து விடுவேன்.
அறிவிப்பாளர்:அபூகதாதா(ரலி)
நூல்:ஸஹீஹுல் புஹாரி.
ஹதீஸ் இலக்கம்:707 708 709 710.
حدثنا موسى بن إسماعيل: حدثنا إبراهيم بن سعد: حدثنا الزهري، عن هند بنت الحارث: أن أم سلمة رضي الله عنها قالت:
كان الرسول صلى الله عليه وسلم إذا سلم، قام النساء حتى يقضي تسليمه، ومكث يسيرا قبل أن يقوم. قال ابن شهاب: فأرى – والله أعلم – أن مكثه لكي ينفذ النساء، قبل أن يدركهن من انصرف من القوم.
உம்மு ஸலமா(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்:நபி(ஸல்)அவர்கள் ஸலாம் கொடுத்தவுடன் பெண்கள் எழுந்து விடுவார்கள்.நபி(ஸல்)அவர்கள் எழுவதற்கு முன் சற்று அமர்ந்திருப்பார்கள். பெண்கள் ஆண்களைச் சந்திக்காத வகையில் திரும்பிச் செல்வதற்காக நபி(ஸல்)அவர்கள் இவ்வாறு தங்கியிருந்ததாக நான் கருதுகின்றேன் என்று இப்னு ஹிஷாம் கூறுகின்றார்.
அறிவிப்பாளர்:உம்மு ஸலமா(ரலி)
நூல்:ஸஹீஹுல் புஹாரி
ஹதீஸ் இல:807
حدثنا قتيبة بن سعيد، ثنا سفيان، عن الزهري، عن أبي سلمة، عن أبي هريرة قال:
قال رسول اللّه صلى الله عليه وسلم: ‘التسبيح للرجال، والتصفيق للنساء’.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:(தொழுகையில் இமாம் தவறு செய்தால் தவறைச் சுட்டிக்காடுவதற்கு)தஸ்பீஹ் கூறுவது ஆண்களுக்கும்இகை தட்டுதல் பெண்களுக்கும் உரியதாகும்.
அறிவிப்பாளர்:அபூஹுரைரா(ரலி)
நூல்:ஸஹீஹுல் புஹாரி
ஹ‌தீஸ் இல‌க்க‌ம்:1203
أخبرنا نصر بن علي حدثنا عبد الأعلى عن معمر عن الزهري عن عروة عن عائشة قالت اعتم رسول الله صلى الله عليه وسلم بالعشاء حتى ناداه عمر بن الخطاب قد نام النساء والصبيان فخرج رسول الله صلى الله عليه وسلم ، فقال إنه ليس أحد من أهل الأرض يصلي هذه الصلاة غيركم ولم يكن أحد يصلي يومئذ غير أهل المدينة

ஆயிஷா(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்:நபி(ஸல்)அவர்கள் ஒரு நாள் இஷாத்தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள்.பெண்களும்இசிறுவர்களும் உறங்கிவிட்டனர் என்று உமர்(ரலி)அவர்கள் கூறியதும் நபி(ஸல்)அவர்கள் புறப்பட்டு வந்து ‘இந்த பூமியில் உங்களைத் தவிர வேறு யாரும் இந்தத்தொழுகையைத் தொழவில்லை’என்று கூறினார்கள்.அன்றைய தினம் மதீனாவாசிகளைத் தவிர வேறு எவரும் தொழுபவர்களாக இருக்கவில்லை.
அறிவிப்பாளர்:ஆயிஷா(ரலி)
நூல்:ஸஹீஹுல் புஹாரி.
ஹதீஸ் இலக்கம்:862
மேற்குறித்த ஹதீஸ்கள் அனைத்தும் பெண்கள் பள்ளிவாயலுக்கு வரமுடியுமென்பதை அழகாக எமக்கு எடுத்துரைக்கின்றன.
அல்லாஹ்வுடைய தூதரே இந்நடைமுறையை அங்கீகரித்திரிக்கும் போது நமது நாட்டில் முஸ்லிம்களின் மார்க்க தலைமைத்துவம் என தம்மைத் தாமே கூறிக்கொள்ளும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் அதன் ஆதரவாளர்களும் பெண்கள் பள்ளிக்கு வருவதை எதிர்க்கும் அவலநிலையை கண்கூடாகக் கானுகின்றோம்.
எனவே இஸ்லாத்தில் எதுவெல்லாம் ஆதாரபூர்வமாகச் சொல்லப்பட்டுள்ளனவோ அத்தனை காரியங்களையும் மேற்கொள்ளும் மனோநிலையை எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவர்களுக்கும் தந்தருள்வானாக!


(மூலம்: by  )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE