......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 20 June 2013

மக்கள் தொடர்பாடல் ஒழுக்க நெறிக்கோவை தயாரிக்கும் நடவடிக்கையில் ஊடக அமைச்சு

யோசனைகளை அனுப்ப கோருகிறது அமைச்சு
மக்கள் தொடர்பாடல் ஒழுக்க நெறிக் கோவையை தயாரிப்பதற் கான பூர்வாங்க நடவடிக்கைகளை மக்கள் தொடர்பாடல் அமைச்சு ஆரம்பித்துள்ளது.

இதன் பூர்வாங்க நடவடிக்கையாக தற்போது நாட்டிலுள்ள பல்வேறு ஊடக நிறுவனங்கள் தொழிற்சங்க அமைப்புக்கள் தயாரித்துள்ள ஒழுக்கநெறி பிரமாணங்களையும் சர்வதேச அனுபவங்களையும் அடிப் படையாகக் கொண்டு தயாரிக்கப் பட்ட ஒழுக்க நெறிக் கோவையின் சட்டவரைவு மக்கள் தொடர்பாடல், தகவல் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் (www.media.gov.lk) பிரசுரமாகியுள்ளது.
இந்த சட்ட வரைபை கலந்துரையாடலுக்கான குறிப்புரையாகப் பயன்படுத்திச் சகல தரப்பினரின் கருத்துக்களைப் பெற்று விரிவான ஒரு பேச்சுவார்த்தை மூலம் சகலரும் ஏற்கும் ஊடக ஒழுக்க நெறியை கட்டி எழுப்புவது இந்த அமைச்சின் நோக்கமாகும்.
இவ்விடயமாக சகல தரப்பினரின் யோசனைகளையும், கருத்துக்களையும் இந்த அமைச்சுக்கு அனுப்பி வைக் கவும். மக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சின் செயலர் சரித்த ஹேரத் இவ் வாறு தெரிவித்துள்ளார். (எப். எம்.)

(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/20/?fn=n1306204 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE