......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 11 June 2013

புகலிடக் கோரிக்கையாளர்களுடன் சென்ற படகு மூழ்கியதாக அஞ்சப்படுகிறது

புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த மற்றுமொரு படகு அவுஸ்திரேலியாவுக்கு அப்பால் மூழ்கியுள்ளதாக அஞ்சப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து காணாமல் போன இப்படகை அதிகாரிகள் நேற்றிலிருந்து தேடி வருகின்றனர். 

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையேயான கடற்பரப்பில் கொக்கோஸ் தீவுக்கு அப்பால் 2 விமானங்களின் உதவியுடன் தேடுதல் மேற்கொள்ளப்படுவதாக அவுஸ்திரேலிய கடல் பாதுகாப்பு அதிகாரசபை இன்று உறுதிப்படுத்தியுள்ளது. 

கொக்கோஸ் தீவுக்கு வடக்கே 260 கடல் மைல் தொலைவில் இப்படகு காணப்பட்டதாக நம்பப்படுகின்றது. 

இப்படகில் எத்தனை பேர் பயணித்துள்ளனரென்பது தொடர்பில் தெரியவரவில்லை. 

 கடந்த வாரம் கிறிஸ்மஸ் தீவுக்கு அப்பால் படகொன்று மூழ்கியதில் குறைந்தபட்சம் 55 ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் உயிரிழந்திருந்தனர். 

(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/70413-2013-06-11-09-06-05.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE