......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 24 June 2013

பலஸ்தீன புதிய பிரதமரும் இராஜினாமா

பலஸ்தீன பிரதமராக பொறுப்பேற்று இரண்டு வாரமே ஆன ரமி ஹம்தல்லாஹ் அந்த பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் நேற்று ஏற்றுக்கொண்டார்.

ஹம்தல்லாஹ் கடந்த வியாழக்கிழமையே தனது இராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் ஹம்தல்லாஹ்வின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாகவும் பலஸ்தீன இடைக்கால அரசின் தலைவராக ஜனாதிபதியே செயற்படுவார் என்றும் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் ஊடக பேச்சாளர் நபில் அபுர்தனா நேற்று குறிப்பிட்டார்.
ஹம்தல்லாஹ் தனது இரு உதவியாளர் குறித்து ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்தே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக்கரை நகரான நப்லூஸிலிருக்கும் அல் நஜாஹ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவரான ஹம்தல்லாவை பிரதமர் பதவியை ஏற்று புதிய அரசை அமைக்குமாறு ஜனாதிபதி அப்பாஸ் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே அவர் அந்த பொறுப்பை ஏற்றார்.
ஹம்தல்லாஹ் தலைமையிலான 24 அமைச்சர்களைக் கொண்ட பலஸ்தீன இடைக்கால அரசு கடந்த ஜூன் 6 ஆம் திகதி பொறுப்பேற்றது. எனினும் ஏற்கனவே பிரதமர் பதவியில் இருந்து விலகிய பய்யத் போன்றே ஹம்தல்லா ஹ்வுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் பய்யத் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ¤டனான கருத்து முரண்பாட்டை அடுத்து கடந்த ஏப்ரல் நடுப்பகுதியில் ராஜினாமா செய்தார்.
பலஸ்தீன நிதி அமைச்சராக இருந்த நபில் கஸ்ஸிஸ் தனது பதவியை ராஜினாமா செய்த போது அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்ட நிலையில் பிரதமராக இருந்த பய்யத் ஏற்காததே அந்த கருத்து முரண்பாட்டுக்கு காரணமாக இருந்தது.


(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/24/?fn=w1306245 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE