கொழும்பு, வடக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் அலுவலகத்தைச்சேர்ந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் உட்பட ஆறு பொலிஸாரை குற்றப்புலனாய்வு (சி.ஐ.டி) பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
அவர்களிடமும் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்வதற்காகவே குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைத்துள்ளனர்.
பாதணி வர்த்தகரான ஷியாம் ஹுஸம்தீன் கடத்தப்பட்டு கொலைச்செய்யப்பட்டமை மற்றும் வேறு வழக்குகள் தொடர்பாக பிரதிபொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன தடுப்புக்காவல் கட்டளையின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்துவைக்கப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே அவருடைய அலுவலகத்தில் கடமையாற்றி பொலிஸ் அதிகாரிகள் அறுவரையும் வாக்குமூலமளிப்பதற்காக குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைத்துள்ளனர்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/70443-2013-06-11-12-45-48.html#sthash.17vKjZc3.dpuf )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.