......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 25 June 2013

'அகதிகள் அல்ல, இடம்பெயர்ந்தவர்கள் மட்டுமே பதியலாம்'

-அழகன் கனகராஜ் 
வாக்காளர்களை பதிவு செய்தல் (விசேட ஏற்பாடுகள் ) திருத்தச் சட்டத்தின் பிரகாரம், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மட்டுமே தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துக்கொள்ளலாம்.
அகதிகள் மற்றும் அரசியல் அந்தஸ்து கோரியிருப்பவர்களை வாக்காளர்களாக பதிவு செய்யமுடியாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 2012 ஆம் ஆண்டிற்காக வடக்கு கிழக்கு மாகாணங்கள் சார்பாக குறை நிரப்பு வாக்காளர் இடாப்பொன்றை தயாரிப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த 22 ஆம் திகதி கிராமசேவர்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் ஜுன் மாதம் 28 பொறுப்பேற்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தேர்தல்கள் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இந்த தேர்தல் இடாப்பில் தங்களை பதிவு செய்துக்கொள்ளவேண்டுமாயின் அவர்கள் இலங்கை பிரஜையாக இருக்கவேண்டும். வெளிநாடுகளில் தங்கியிருப்போர் வாக்காளர்களாக பதிவுசெய்துக்கொள்ள முடியாது. வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து மீண்டும் நாட்டுக்கு திரும்பிவந்தவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். இந்த திருத்த சட்டத்தின் பிரகாரம் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவர். நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து அகதிகளுக்கு, அரசியல் தஞ்சம் கோரியிருப்போர் இந்த திருத்தச்சட்டத்தின் ஊடாக பதியப்படமாட்டார்கள் என்றும் அவர் சொன்னார். அத்துடன் நாட்டில் நிலைமை நன்றாக இருக்கின்றது. யார் வேண்டுமானாலும் எங்குவேண்டுமானாலும் போய் வரலாம். இவ்வாறான நிலையில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படாதவிடத்து தேர்தல்கள் நடைபெறவிருக்கின்ற மாகாணங்களுக்கு வெளியே வாக்குச்சாவடி நிறுவப்படமாட்டாது. வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து கோரியிருப்போரை வாக்காளர்களாக பதியமுடியாது. எனினும், வெளிநாட்டிலுள்ளோர் இலங்கை கடவுச்சீட்டை வைத்திருந்தால் அவர்கள் வாக்காளர்களாக பதிவுசெய்துக்கொள்ளப்படுவார்கள். அவ்வாறு தங்களை வாக்காளர்களை பதிவு செய்துக்கொள்ளவேண்டுமாயின் அவர்கள் கட்டாயமாக நாட்டுக்கு வருகைதரவேண்டும் என்றும் அவர் கூறினார். அத்துடன், வாக்காளர்கள் இரண்டு இடங்களில் தங்களுடைய பெயர்களை பதிவு செய்துக்கொள்ள முடியாதவகையில் விண்ணப்பங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றையும் மீறி இரட்டைப்பதிவு மேற்கொள்ளப்படுமாயின் அவ்வாறானவர்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

(- See more at: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/72183-2013-06-24-14-45-07.html#sthash.PFXMeXGF.dpuf )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE