......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 25 June 2013

13 யை திருத்த சப்ரகமுவ,தென் ஆதரவு

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை திருத்துவதற்கு சப்ரகமுவ மற்றும் தென் ஆகிய இரண்டு மாகாண சபைகளும் ஆதரவளித்துள்ளன. 

இது தொடர்பிலான யோசனைகள் சப்ரகமுவ மற்றும் தென் ஆகிய இரு மாகாண சபைகளிலும்; இன்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த யோசனை சப்ரகமுவ மாகாண சபையில் 17 மேலதிக வாக்குகளினாலும் தென் மாகாண சபையில் ஒரு மேலதிக வாக்கினாலும் நிறைவேற்றப்பட்டது.

இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாகாண சபைகளை இணைப்பதற்கான தேவையில்லை. 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபை பட்டியலில் உள்ள சில விடயதானங்கள் தொடர்பில் சகல மாகாண சபைகளின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு பதிலாக பெரும்பான்மை மாகாண சபைகளின் அனுமதி போதுமானதாகும் ஆகிய இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. 

இதேவேளை, தென் மாகாண சபையில் இந்த யோசனைக்கு ஆளும் கட்சியை சேர்ந்த ஏழுபேர் எதிர்க்கட்சியுடன் இணைந்து எதிராக வாக்களித்தனர்.

தென் மாகாண சபையில் இந்த யோசனை ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டது. இதில் சரத் யாப்பா அபேவர்தன வாக்களிக்கவில்லை. 

எனினும், இதயசாட்சிக்கு விரோதமானது என்றாலும் கட்சி எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக ஆதரவாக வாக்களித்ததாக அமைச்சர் யு.ஏ.டீ. ஆரியதிலக்க தெரிவித்தார்.

(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/72307-13-.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE