தாற்பரியங்களை ஆராய்ந்த பின் தனது கருத்தை அறிவிக்கவுள்ளதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளர். 'இலங்கையில் உள்ள பல அரசியல் கட்சிகள் தீர்மானிக்கவுள்ள விடயமாக இது இருப்பினும், நாம் அதன் தாற்பரியங்களை நிச்சயமாக கவனத்தில் எடுப்போம். அதன் பின் இலங்கையின் அதிகாரம் வாய்ந்தவர்களுக்கு இந்த விடயம் தொடர்பில் எமது கருத்தை தெரியப்படுத்துவோம்' என தி.மு.க. தலைவர் மு.கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் இந்திய பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையில் சகல சமூகத்தினரும் தமக்கு உரித்தான இடத்தை பெறும் வகையில் மத்திய அரசாங்கம் தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
(மூலம்: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/71307-13-------.html#sthash.NLEHBzlY.dpuf )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.