- எம்.ஐ.ஏ.நஸார் -
மேலும் 34 யாத்திரிகள் காயமடைந்த இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மக்கா போக்குவரத்து திணைக்களப் பேச்சாளரான அலி அல் ஸஹ்றானி தெரிவித்தார்
மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையே ஜமொம் வீதியில் விபத்து நிகழ்ந்தபோது குறித்த பஸ்வண்டி 46 ஜோர்தானியர்களை ஏற்றிச்சென்று கொண்டிருந்ததாக அல் ஸஹ்றானி தெரிவித்தார். 7 யாத்திரிகள்களுக்கு சம்பவ இடத்திலேயே மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
வாகன விபத்து தொடர்பான அறிக்கை சிவில் பாதுகாப்பு கட்டுப்பாட்டறைக்கு கிடைத்து மீட்பு குழுவும் அம்புயூலன்சும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஜித்தாவிலுள்ள சிவில் பாதுகாப்புப் பிரிவின் பேச்சாளரான கேணல் சயீட் சர்ஹான் தெரிவித்தார்.
காயமடைந்த பயணிகள் வானூர்தி மூலமாக மக்கா மற்றும் ஜித்தாவிலுள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காயமடைந்த 03 பயணிகள் கிங் அப்துல் அஸீஸ் வைத்தியசாலைக்கும் 22 பேர் மக்காவிலுள்ள வைத்தியசாலைக்கும் 4 பேர் ஜித்தாவிலுள்ள கிங் பைஸல் வைத்தியசாலைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவ இடத்தை போக்குவரத்துத் திணைக்கள பணிப்பாளர் ஹொமௌட் அல் புகாமி, விபத்து அலுவலக பணிப்பாளர் பிரிகேடியர் ஹிலால் அல் குராஷி மற்றும் விபத்து திணைக்கள பணிப்பாளர் சல்மான் அல் முதைரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர்.(A2)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.