இந்த ஆர்ப்பாட்டத்தில் 150,000 க்கும் அதிகமா னவர்கள் பங்கேற்றதாக பொலிஸார் கணித்த போதும், ஆர்ப்பாட்டக் காரர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியிருந்ததாக ஏற்பாட்டாளர்கள் கணித்துள்ளனர். தலைநகரின் மையப் பகுதி முழுவதையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்கிரமித்தனர்.
எனினும் இந்த ஆர்ப்பாட்டம் நிறைவடையும் தறுவாயில் தீவிர வலதுசாரி செயற்பாட்டாளர்களுக்கும் கலகமடக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் வெடித்தது. இதில் 96 பேர் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டது.
பிரான்ஸில் ஒருபால் திருமணத்தை அங்கீகரிக்கும் ஆவணத்தில் ஜனாதிபதி பிரான்கொய்ஸ் ஹொலன்டே கடந்த வாரம் கைச்சாத்திட்டார். எனினும் இந்த விவகாரம் தொடர்பில் பிரான்ஸ் மக்களிடையே பாரிய பிளவு ஏற்பட்டுள்ளது. ஒருபால் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீவிர வலதுசாரி வரலாற்றியலாளர் தற்கொலை செய்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சியான யு. எம். பி. உறுப்பினர் ஜக்ஸ் மெயாட், தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டத்தை ரத்துச் செய்வதாக குறிப்பிட்டார். “அவர்கள் இறைவனுடன் விளையாடுகிறார்கள். அவர்கள் திருமணம் முடிப்பதோடு கதை முடிவதில்லை.
குழந்தைகளை தத்தெடுப்பார்கள். இதனால் தாய் அல்லது தந்தை இல்லாத குடும்பங்கள் உருவாகும்” என அவர் குறிப்பிட்டார். பிரான்ஸ் ஒருபால் திருமணத்தை அங்கீக(மூலம்: http://www.thinakaran.lk/2013/05/28/?fn=w1305284 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.