......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 28 May 2013

சிரிய ஆயுதத் தடையை தளர்த்த ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை

சிரியாவின் கிளர்ச்சிப் படைகளுக்கு ஆயுதங்கள் வழங்குவதைத் தடுத்து வருகின்ற ஆயுதத் தடை ஒப்பந்தத்தை தளர்த்தலாமா என்பது பற்றி விவாதிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸில் கூடவுள்ளனர்.
அமுலில் இருந்து வருகின்ற ஆயுதத் தடை ஒப்பந்தம் இந்த வாரத்தோடு காலாவதியாகிறது.
இந்நிலையில் அரசாங்கத்தை எதிர்க்கும் மிதவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்க வகைசெய்யும் விதமாக இந்த ஒப்பந்தத்தின் விதிகள் மாற்றப்பட வேண்டும் என பிரிட்டனும் பிரான்ஸ¤ம் விரும்புகின்றன.
இந்த நிலைப்பாட்டுக்கு அமெரிக் காவின் ஆதரவும் உள்ளது.
ஆனால் சிரியாவில் எத்தரப்புக்கும் ஆயுதம் வழங்கக் கூடாது முழுமையாக நிறுத்த வேண்டும் என வேறு பல ஐரோப்பிய நாடுகள் வாதிடுகின்றன.
சிரியாவின் கிளர்ச்சிப் படைகளுக்கு ஆயுதம் கொடுத்தால் அது அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு அரசியல் தீர்வு காணுகின்ற முயற்சிகளை குலைத்துவிடும் என ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சர் பி. பி. சி. யிடம் கூறினார். ஜெனீவாவில் தொடங்கவுள்ள ஐ. நா. மனித உரிமைகள் மன்றத்தின் கூட்டத் தொடரிலும் சிரிய விவகாரமே முக்கிய இடம் பிடிக்கும் என்று கருதப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய ஆயுத தடை

* கடந்த 2011 மே தொடக்கம் உள்நாட்டில் நிலவும் அடக்கு முறைக்கு எதிராக ஆயுதம் மற்றும் உப கரணங்கள் இறக்குமதி, ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
* உயிராபத்தற்ற இராணுவ உபகரணங்கள் மற்றும் தொழில் நுட்ப உதவிகள் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் வழங்க 2013 பெப்ரவரி தொடக்கம் அனுமதி அளிக்கப்பட்டது.
* சிரியாவின் அனைத்து சரக்கு விமானங்களுக்கும் ஐரோப்பிய ஒன்றிய விமான நிலையங்களில் தடை விதிக்கப்பட்டது.
* ஆயுதங்கள் கொண்டு செல்வதாக சந்தேகிக்கப்படும் சிரிய விமானம் மற்றும் கப்பல்களை சோதிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு கடப்பாடு உள்ளது.
* அடக்கு முறைக்கு எதிராக 54 நிறுவனங்கள் மற்றும் 179 பேரின் சொத்துக்கள் முடக்கப்பட்டன.
* தொழில்நுட்ப கண்காணிப்பு கருவிகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டது.

(மூலம்: http://www.thinakaran.lk/2013/05/28/?fn=w1305283 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE