......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 28 May 2013

பஸ்களில் டிக்கெட்டுகளுக்கு பதிலாக முற்கொடுப்பனவு அட்டை

*மேல் மாகாணத்தில் நடைமுறை
*வெற்றியளிப்பின் நாடு முழுவதும் அமுல்
பஸ்களில் டிக்கெட் பெறுவதற்குப் பதிலாக முற்கொடுப்பனவு அட்டை முறையை அறிமுகப்படுத்தும் திட்டத்தை முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று தெரிவித்தார்.

இதனூடாக பஸ்களில் மீதிப்பணம் வழங்குதல் பஸ் உரிமையாளர்களுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் குறைதல் உட்பட பல பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல் மாகாணத்தில் முற்கொடுப்பனவு அட்டை (Prepaid Card) முறையை அமுல்படுத்துவதற்கு மக்கள் வங்கி உதவ முன்வந் துள்ளது. இது குறித்து மக்கள் வங்கித் தலைவர் காமினி செனரத்துடன் பேச்சு நடத் தியதாகவும் கெமுனு விஜே ரத்ன குறிப்பிட்டார். முற்கொடுப்பனவு அட்டையை செலுத்தி பஸ்களில் பயணம் செய்யும் முறை பலநாடுகளில் காணப்படுகிறது.
இது முதற்தடவையாக இலங்கையில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் கெமுனு கூறினார்.
மேல்மாகாணத்தில் இந்தத் திட்டம் சிறப்பாக இடம்பெறும் பட்சத்தில் ஏனைய மாகாணங்களிலும் இதனை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை தூர சேவை பஸ்களிலும் முற்கொடுப்பனவு அட்டைமுறையை முன்னெடுப்பது குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது


(மூலம்: http://www.thinakaran.lk/2013/05/28/?fn=n1305284 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE