......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 27 May 2013

அப்துல் கலாமுக்கு அமெரிக்க விருது

விண்வெளி ஆய்வுத் துறையில் சிறந்த பங்காற்றியதற்காக குடியரசு முன்னாள் தலைவரும் விஞ்ஞானியுமான ஏ. பி. ஜே. அப்துல் கலாமுக்கு அமெரிக்க தேசிய விண்வெளி அமைப்பு (என். எஸ். எஸ்) சார்பில் வொன்ஹெர் வான் பிரான் நினைவு விருது வழங்கப்பட்டு ள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டியாகோவில் நடைபெற்ற 32 ஆவது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மேம்பாட்டுக் கருத்தரங்கில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக் கொண்ட பின் அப்துல் கலாம் பேசியதாவது :-
‘விண்வெளியிலிருந்து சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பது தொடர்பான ஆராய்ச்சிகளை உலக நாடுகள் ஒருங்கிணைந்து நடத்த வேண்டும். இந்த விஷயத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் பிற நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என்றார்.


(மூலம்: http://www.thinakaran.lk/2013/05/27/?fn=i1305271 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE