......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 29 May 2013

வனவிலங்கு பூங்காக்களில் இரகசிய கமெராக்கள்

வனவிலங்கு பூங்காக்களை பார்வையிட வருவோரின் நடத்தையை கண்காணிக்க இரகசிய கமெராக்களை பொருத்தவுள்ளதாக வனவிலங்கு அமைச்சு கூறியுள்ளது.

வனவிலங்கு பூங்காக்களுக்கு வருகைதருவோரும் சேவை வழங்குநர்களும் நல்லொழுக்க நியமங்களுக்கு மாறாக நடந்துகொள்வதாக ஆய்வொன்று சுட்டிக்காட்டியுள்ளதால் அமைச்சு இந்த நடவடிக்கையையை எடுக்கப்போவதாக வனவிலங்கு பிரதியமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன கூறினார்.

இந்த நிலைமை தொடர்பாக பல முறைப்பாடுகளும் அமைச்சுக்கு கிடைத்துள்ளது.

தென்மாகாணத்திலுள்ள யால தேசிய பூங்கா தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.  

வனவிலங்கு திணைக்களம் சேவை வழங்குவோருக்கு நன்நடத்தைக்கோவை, வருகை தருவோர் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வூட்டும் பயிற்சிகளை வழங்கியதாக வனவிலங்கு பிரதியமைச்சர் கூறினார்.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/68744-2013-05-28-13-25-02.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE