......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 4 March 2013

கல்முனையில் KPL கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பம்

YASHICA Digital Camera-கல்முனை நிருபர்-
கல்முனை கிரிக்கெட் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  கல்முனை கே.பி.எல். ரீ-20 பிரீமியர் லீக்-2013 கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப விழா கடந்த வெள்ளிக்கிழமை (01) கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் கல்முனை கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் எம்.எம். ஜெஸ்மின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் கலந்து சிறப்பித்தார்.
இந்த முதலாம் நாள் ஆட்டத்தில் கல்முனை ஜிம்கானா விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கல்முனை யங் பேட்ஸ் விளையாட்டுக்கழகம் விளையாடியது. இந்தபோட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய ஜிம்கானா விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடியது. 20 ஓவர்கள் முடிவில் தனது சகல விக்கெட்டுக்களையும் இழந்து 84 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் எம். பர்ஸான் 18 பந்துகளுக்கு 18 ஓட்டங்களையும்இ இஸட் நியாஸ் 16 பந்துகளுக்கு 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யங் பேட்ஸ் விளையாட்டுக்கழகம் சகல விக்கெட்டுக்களையும் இழந்து  15 ஓவர்களுக்கு 56 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியை தழுவிக் கொண்டது.
இதன் அடிப்படையில் ஜிம்கானா விளையாட்டுக்கழகம் 28 மேலதிக ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இப்போட்டியின் ஆட்ட நாயகனாக இஸட். நியாஸ் தெரிவானார். இவருக்கான நினைவுக்கிண்ணத்தை  கல்முனை கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் எம்.எம். ஜெஸ்மின் வழங்கி கௌரவித்தார்.
இச்சுற்றுப்போட்டியின் சகல போட்டிகளும்  தொடர்ந்தும் ஒரு வார காலத்திற்குள் நடைபெற்றுஇ இறுதிப்போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரிக்கும் அணிக்கு பெறுமதிமிக்க பரிவசில்கள் வழங்கப்படுமென கல்முனை கிரிக்கெட் சம்மேளனத்தின் செயலாளர் ஏ.பி.எம். பைசால் தெரிவித்தார்.
இந்த சுற்றுப்போட்டியில் கல்முனைப்பிரதேசத்தைச் சேர்ந்த விளையாட்டுக்கழகங்களான டொப் றேங், ஏஜ் ஸ்டீல், றினோன், யங்பேட்ஸ், டொப்பாஸஸ், டொப் ஹீரோஸ்,  லெஜன்ட், ஹரி கெயின்ஸ், ஜிம்கானா மற்றும்  ரீ ஸ்டார் ஆகிய 10 விளையாட்டுக்கழகங்கள் கலந்துகொள்கின்றன.









(மூலம்:kattankudyinfo.com  )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE