......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 14 March 2013

சந்திரிக்காவுடன் எதிரணியினர் ஒரே மேடையில்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உட்பட எதிரணி கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் சந்திக்கவுள்ளனர்.

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிரணி கட்சிகளின் தயாராக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க அண்மையில் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்த நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க உட்பட ஆளும் எதிர் கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் சந்திக்கவுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் எஸ்.பி.திசாநாயக்க உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவர்கள் "வேற்றுமையில் ஓற்றுமை" எனும் தொனிப்பொருளிலான கருத்துக்களம் நிகழ்விலேயே கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய ஐக்கிய முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜெய்க் ஹில்டனில் பிற்பகல் 1.30 மணியிலிருந்து இடம்பெறவுள்ளது.

(மூலம்:http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60694-2013-03-14-06-19-14.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE