......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 5 March 2013

இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத்தில் தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்களைச் செய்திருப்பின் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளித்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தின் நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரே இவ்வாறு தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.

மேற்படி ஆதரவாளர் இயக்குநர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தவர் ஆவார்.  

நேற்று திங்கட்கிழமை பகல் மண்ணெண்ணெய் போத்தலுடன் வந்த இவர், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நின்றுகொண்டு இலங்கை ஜனாதிபதியை  போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் எனக் கூறிக்கொண்டு தீக்குளித்ததாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.  

இதனைத் தொடர்ந்து உடல் முழுவதும் தீ பற்றி எரிவடைந்த நிலையில் இவரை அங்கிருந்தோர் தீயை அணைத்து வைத்தியசாலையில் அனுமதித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. (தட்ஸ் தமிழ்)


(மூலம்:http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60031-2013-03-05-07-19-28.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE