உண்மையாகவே எதாவது நோயொன்றினால் துமிந்த சில்வா பாதிக்கப்பட்டிந்தால் அவரை கைது செய்து சிறையில் போட வேண்டும் என வலியுறுத்தவில்லை என அவர் குறிப்பிட்டார்.
எனினும் அவர் எங்கிருந்தாலும் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழிருக்க வேண்டும் என ஹிருனிகா தெரிவித்தார்.
இது தான் எமது நாட்டின் சட்டமாகும். அத்துடன் நாட்டின் சட்டத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு எனவும் அவர் குறிப்பிட்டார்.
"இந்த நாட்டின் சட்டத்தின் பிரகாரம் குற்றவாளி நாட்டை வந்தடைந்தவுடன் கைது செய்யப்பட வேண்டும். இதனால் சட்டமா அதிபரினால் சந்தேகநபர் என தெரிவிக்கப்பட்டவர் விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்" என ஹிருனிகா தெரிவித்தார்.
எனினும் அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருதாக தகவல்கள் கிடைந்துள்ளன என அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கைது செய்யப்பட வேண்டும் அல்லது நீதிமன்றில் சரணடைய வேண்டும் என ஹிருனிகா மேலும் தெரிவித்தார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60034-2013-03-05-07-52-18.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.