......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 20 March 2013

ஜனாதிபதியை வரவேற்க ஏறாவூர் நகரம் தயாராகிறது

Alighar National School-ஏறாவூர் அபூ பயாஸ்-
தேசத்திற்கு மகுடம் அங்குரார்ப்பண நிகழ்வுகளுக்காக நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்புக்கு வருகை தரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முதலாவது நிகழ்வுக்காக  ஏறாவூர் நகருக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதியின் வருகைக்கான ஏற்பாடுகள் சகலதும் பூர்த்தியாகியிருப்பதாக முன்னாள்பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் ஏறாவூர் நகர பிதாவுமான அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
stamp
Alighar NS 2
ஏறாவூருக்கு வருகை தரும் ஜனாதிபதியவர்கள் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை 03.00 மணியளவில் நூற்றாண்டு விழா கல்வெட்டு ஜனாதிபதியால் திரைநீக்கம் செய்து வைக்கப்படுவதோடு, நூற்றாண்டு விழாவுக்கான அலிகார் தேசியக் கல்லூரியின் முதல் நாள் தபால் தலையும் வெளியிட்டு வைக்கப்படும் என கல்லூரியின் முதல்வர் எஸ்.ஏ நஜீப் தெரிவித்தார்.
logo 100
Alighar National School
இதேவேளை அன்றைய தினம் காலை ஏறாவூருக்கு வருகை தரவுள்ள கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அவர்களால் இரண்டரைக் கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள அலிகார் தேசியக் கல்லூரியின் கேட்போர் கூடத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கும் நிகழ்வும்  இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



(மூலம்: kattankudyinfo.com)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE