......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 12 March 2013

'ஹலாலை முற்றாக தடை செய்யவும்'

ஹலாலை முற்றாக நாட்டிலிருந்து தடை செய்ய வேண்டும் என பொது பல சேன அமைப்பு தெரிவித்தது. உள்நாட்டில் விற்பனையாகும் பொருட்களில் ஹலால் இலச்சினையை நீக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

அத்துடன் சிங்க பௌத்தர்கள் ஹலால் உற்பத்தி பொருட்களை முற்றாக பகிஷ்கரிக்க வேண்டும் என என பொது பல சேன அமைப்பு தெரிவித்தது.

பொது பல சேன அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பொது பல சேன அமைப்பின் பிரதிநிதிகள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"ஹலால் இல்லாத உற்பத்தி பொருட்களை அடையாளம் காண்பதற்காக பௌத்த வர்த்த சம்மேளனமொன்றை அமைக்க திட்டமிட்டுள்ளோம். 

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை இன்னும் வெளியாகவவில்லை. இந்நிலையில்  அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த பிரச்சினைகள் தொடர்பாக மஹா சங்கத்திடம் அனைத்து விடயங்களையும் தெரிவிப்போம். அத்துடன் ஹலால் சான்றிதழ் வழங்குவதற்காக பெறப்பட்ட பணங்கள் கட்டாயம் திருப்பி செலுத்தப்பட வேண்டும்" என்றனர்.


(மூலம்:http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60544-2013-03-12-11-38-33.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE