விசேட அறிவிப்பொன்றை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் இன்று புதன்கிழமை விடுத்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதற்காகவே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தயார் என அவர் தெரிவித்தார்.
"நாட்டுக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்படுவது நிச்சயம். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் 13ஆவது திருத்தம் ஆகியவற்றை அரசாங்கம் அமுல்படுத்தல் மற்றும் தேசிய பிரச்சினை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஐக்கிய தேசிய கட்சி நிச்சயம் ஆதரவு வழங்கும்" என ரணில் விக்ரமசிங் மேலும் குறிப்பிட்டார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60632-2013-03-13-10-06-09.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.