......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 20 March 2013

இலங்கைக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது: அமெரிக்கா

இலங்கைக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மனித உரிமை நிலமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நூலாண்ட் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தை அமெரிக்கா விளக்கியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியில் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் சில வாக்குறுதிகளை அளித்திருந்ததாகவும், அவற்றை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் போதியளவு அபிவிருத்தி ஏற்படவில்லை எனத் தெரிவிக்கும் உலக நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா செயற்பட்டு வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நூலாண்ட் தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தத் தேவையான நகர்வுகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும், அதன் காரணமாகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுதற்கான சாத்தியங்கள் தென்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கத்துடன் அமெரிக்கா வெளிப்படைத்தன்மையடன் நடந்து கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்காவின் தீர்மானத்திற்கு அனைத்துத் தரப்பினரதும் ஆதரவு அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச சமூகத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் இலங்கை அரசாஙக்ம் சகல நெருக்கடி நிலைகளிலிருந்தும் மீள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிரமமான முறையில் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல்,மனித உரிமை மீறல் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் போன்ற நோக்கங்களுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.


(மூலம்:http://www.virakesari.lk/article/local.php?vid=3562 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE