......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 19 March 2013

இலங்கை - இந்திய பாதுகாப்பு கலந்துரையாடல் ரத்து

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நடைபெறவிருந்த பாதுகாப்பு கலந்துரையாடல் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளன என இந்திய செய்திகள் தெரிவித்தன.

எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு இந்தியாவில் நடைபெறவிருந்த பாதுகாப்பு செயலாளர்கள் மட்டத்திலான கலந்துரையாடலே இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

எனினும் இரத்து செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இலங்கையுடனான உறவுகளுக்கு இந்தியாவிலுள்ள தமிழ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையிலேயே இந்த கலந்துரையாடல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வருடாந்தம் நடைபெறும் இந்த பாதுகாப்பு கலந்துரையாடலில் இரு நாடுகளுக்கும் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் பறிமாறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 


(மூலம்:http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60993-2013-03-18-16-17-52.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE