மேலே குறிப்பிட்டதுதான் சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரும் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவுப் ஹக்கீம் அவர்களிடமிருந்து வெளிவந்த வேதனையான என்று சொல்வதைவிட ஒரு எச்சரிக்கையான அழுகையாக இருந்தது.
அது ஒரு அமைச்சர் அதுவும் நீதித்துறையை சேர்ந்த அமைச்சரும் மற்றும் ஒரு முன்னணி முஸ்லிம் அரசியல் கட்சியின் தலைவருமான ஒருவர் ஸ்ரீலங்காவில் இப்படியான இன மற்றும் மத வெறுப்பை பரப்புவதை நிறுத்தும்படியான ஒரு வேண்டுகோளை விடுத்திருப்பது போதுமான நிதானத்தை கடைப்பிடித்திருப்பதால்தான் என அறியக்கூடியதாக உள்ளது.
பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மீதான கவலை தரும் தாக்குதல்கள் உட்பட, முஸ்லிம் சமூகத்தின்மீது மேற்கொள்ளப்படும் திட்டமிடப்பட்ட உளவியல் மற்றும் சிவில் தாக்குதல்கள் மெதுவாக தலை தூக்கி வருகின்றன. இந்த அறிகுறிகள் ஆபத்தானவை, கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்ற இன அடிப்படையிலான உள்நாட்டு யுத்தத்திலிருந்து ஸ்ரீலங்கா இப்போதுதான் மெதுவாக மீண்டு வருகிறது, மற்றும் எமது கடந்தகாலங்களிலிருந்து நாம் எதையும் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது, அத்தோடு புதிதாக ஒரு மோதலை ஆரம்பிப்பதற்கு பொறுப்பற்ற முறையில் முயற்சிக்கிறது, இது ஒரு இன மத மோதல் இங்கு மதம் ஒரு நச்சுக் கலவையாக வீசப்பட்டுள்ளது.
1.வெறுப்பு பிரச்சாரம்
இந்த புதிய பிரச்சாரம் வெளிப்படையாக அரசியல் கட்சிகளால் தலைமை தாங்கப்படவில்லை, ஆனால் ஆளும் கூட்டணி அரசின் அகத்தூண்டுதலினைக் கொண்டுள்ள மதத் தலைவர்களால் தலைமை தாங்கப்படும் இயக்கங்களால் நடத்தப்படுகிறது, இதற்கு அரசியல் அடித்தளத்தை கொண்ட காவல்துறையினரின் ஒட்டுமொத்த பின்துணை இருப்பதுபோலத் தெரிகிறது. குறிப்பாக அரசாங்கத்தினால் குறிப்பாக எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளாத நாட்டின் அரசாங்கத் தலைமையுடன் வெற்றிகரமாக ஒரு உயர்மட்ட கூட்டத்தை நடத்தியிருந்த ஒரு இயக்கமே இதை முன்னின்று நடத்துகிறது, கடந்த வாரம் மகரகமவில் இந்த இயக்கம் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியை நடத்திக் காட்டியிருந்தது. அறிக்கைகள் தெரிவிப்பதன்படி, அவர்களது கூட்டம் சொல்லாட்சி கலையுடன் மிக நெருங்கிய சூழலையும் நடவடிக்கையையும் ஒத்ததாக இருந்தது,
இரண்டாவது உலகப்போரின் ஆரம்பத்தில் பாசிச ஆர்ப்பாட்டங்கள் ஐரோப்பாவின் பகுதிகளைச் சூறையாடியதே அதே போல, பெரும்பான்மை இனத்தவர்களின் பொருளாதார அடக்குமுறைகள் காரணமாக இனமத சிறுபான்மையோருக்கு எதிராக அவர்களது குடும்பத்தின் அளவு (இது எல்லோருக்கும் இயலக்கூடிய சுதந்திரமான ஒரு தெரிவாக இல்லையா), அவர்களது உடை அணியும் விதம்,மற்றும் ஏனைய சமூக நடவடிக்கைகள் போன்றவற்றின் மீதான தாக்குதல்கள், நடத்தப்பட்டன. வித்தியாசமாக இது கடந்த நூற்றாண்டின் ஆரம்ப பகுதியில் நாசிகள் யூதர்கள் மீது சொன்னதை அப்படியே நினைவு படுத்துவதாக இருக்கிறது. இன்று அது ஆபிரகாமின் மற்றொரு வழித்தோன்றலான முஸ்லிம்கள்மீது, ஸ்ரீலங்காவில் அதேபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுக்கும்படி நோந்துள்ளது.
2.ஹலால் சான்றிதழ்
இந்த வெளிப்படையான எரிச்சல், முஸ்லிம் சமூகத்தினர் உண்ணும் உணவு உற்பத்திகள், அவர்களது உணவு சட்டதிட்டங்களுடன் ஒத்ததாக இருப்பதை அறிவிக்கும் ஹலால் சான்றிதழ் மீது திரும்பியுள்ளது. இது கிட்டத்தட்ட இஸ்ரயேலுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு கொழும்பிலுள்ள யூத சட்ட நிறுவனமான றாபி, உண்மையில் வழங்கும், கோசர் சான்றதழ் விநியோக நடைமுறையின், அதே வழியில்தான் இதுவும் வழங்கப்படுகிறது, மற்றும் கோபத்தில் நாங்கள் வெடிக்கும் முன்பு, இஸ்ரயேல (யூத என்று வாசிக்கவும்) கபீர் ஜெட் விமானங்களின் அணிதான் எங்கள் யுத்த வெற்றிக்கு பெரிய பங்களிப்பை வழங்கின என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஹலால் சான்றிதழ் வழங்குவதில் என்ன தவறு உள்ளது?,அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு உணவு உற்பத்தி பொருட்கள் அவர்களின் உணவு தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது எனச் சான்றிதழ் வழங்கப்படுவதில் என்ன தவறு? அத்தகைய அடிப்படையான குற்றமற்ற வசதிகள் வணிகமுறையில் எத்தகைய நாகரிகமான சமூகத்திலும் விசேடமாக எங்களைப்போன்ற கலாச்சாரத்திலும் பழமையிலும் மற்றும் பன்மைத்துவத்துக்கான சகிப்புத்தன்மையிலும் பெருமைமிக்க ஒரு வரலாற்றுப் பதிவை கொண்ட ஒரு சமூகத்தில் நிச்சயம் இருக்கவேண்டும்.
ஹலால் சான்றிதழ் என்பது, ஒரு உற்பத்திப் பொருள் கொழுப்புச்சத்து அற்றது அல்லது லக்டோஸ் அற்றது என கலோரி பற்றிய அவதானம் உள்ளவர்களுக்கும், மற்றும் லக்டோஸ் ஒவ்வாமை உள்ள நுகர்வோர்களுக்கும் அறிவித்தல் வழங்குவதைப் போன்ற ஒரு அறிவித்தல்தான். அதில் நியாயமான ஒரு வியாபார பிரச்சினை இருக்குமாயின் அது முதலில் நுகர்வோர் விவகார அதிகாரிகள் சபை அல்லது நீதியான வர்த்;தக ஆணைக்குழுவிடமோதான் அறிவிக்கப்பட வேண்டும், மற்றும் திருப்தியற்ற செயற்பாடான ஒரு நிகழ்வினை சரி செய்வதற்காக நீதிமன்ற வழிகாட்டுதலை கோர முடியும். நிச்சயமாக அது கும்பலான வன்முறைகளுக்கோ அல்லது வீதியில் நியாயம் கோரவேண்டிய பிரச்சினைகளுக்கோ உரியதல்ல.
3.ஸ்ரீலங்கா முஸ்லிம்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் சமூகம் மதம் மற்றும் மொழியால் சிறுபான்மையான ஸ்ரீலங்காவில் வாழும் பழமையான ஒரு சமூகம், இப்பொழுது கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக இருப்பதுடன் நாடு முழவதும் சிதறியும் வாழ்கின்றனர். ஸ்ரீலங்காவின் கலாச்சார சேர்வையில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக உள்ள அவர்கள் ஸ்ரீலங்காவின் தேசிய வாழ்விற்கு முக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். இனப்போர் நடைபெற்றபோது, மதச்சார்பற்ற மிதவாத தலைவர்களால் அவர்கள் அரசியல் ரீதியாக வழி நடத்தப்பட்டார்கள், ஈழப் புலிகளால் அவர்கள் மிருகத்தனமாக வேட்டையாடப்பட்டார்கள், வடக்கிலிருந்து இனரீதியாக சுத்திகரிப்பு செய்யப்பட்டார்கள், மற்றும் அவர்களது பள்ளிவாசல்களில் பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்தபோது எல்.ரீ.ரீ.ஈ யினால் படுகொலை செய்யப்பட்டார்கள். ஸ்ரீலங்காவில் பயங்கரவாதத்துக்கு எதிராக எல்.ரீ.ரீ.ஈ உடன் நடத்திய போரில் முஸ்லிம்கள், இராணுவ புலனாய்வு பிரிவில் ஒரு திறமையான பங்காளார்களாக செயற்பட்டதுடன் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக எம்முடன் செயற்பட்டார்கள். எல்.ரீ.ரீ.ஈயின் வழிகளில் ஆழமான ஒரு அத்தியாவசிய தேவையாக இயக்கப்படும் நீண்டதூர உளவு ரோந்துகளில் பங்களிப்பு நல்கியுள்ளார்கள். அவர்களின் தாய்மொழியான தமிழ் பேசும் திறன் ஸ்ரீலங்காவின் உளவுத்துறை எதிர்ப்பு மற்றும் இரகசிய நடவடிக்கைகள் என்பனவற்றுக்கு மிக முக்கியமான தேவைகளாக இருந்தன. மிகவும் மூலோபயமான இதனை முஸ்லிம் தேசியவாதம் என அழைத்த போதிலும் தமிழ் போர்க்குணம் எழுச்சி பெற்ற காலம் முதலே பொதுவாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பக்கமாகவே இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது,
மற்றும் வரலாற்று ரீதியாக பார்க்குமிடத்து தமிழ் தேசியவாதம் சிங்கள தேசியவாதத்தை காட்டிலும் அவர்களின் சொந்த உரிமைகள் மற்றும் சுதந்திரம் என்பனவற்றுக்கு பாரிய அச்சுறுத்தலாகவே இருந்துள்ளது. முஸ்லிம்களுக்க எதிராக எல்.ரீ.ரீ.ஈ புரிந்துள்ள அட்டூழியங்கள் மூலமாக இந்த அரசியல் நீதி நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ் சமூகம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் தனிமைப் படுத்தப்பட்டிருப்பதுபோல மற்றொரு சிறுபான்மையினமான முஸ்லிம் சமூகமும் தனிமைப் படுத்தப்படுவது ஸ்ரீலங்காவின் நலன்களுக்கு ஏற்புடையதாக இல்லை.
சிங்கள பகுதிகளில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் வணிக நிலையங்கள் மீது சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட தொடர் தாக்குதல்களுக்கு முன்பு, இனரீதியான ஒரு தூய தமிழீழத்தை அடைவதற்கு வேண்டி வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள முஸ்லிம் சமூகத்தினரையும் மற்றும் தெற்கிலுள்ள சிங்களவர்களையும் கூட தொந்தரவு செய்வதும் மற்றும் துன்புறுத்துவதும் எல்.ரீ.ரீ.ஈயின் நோக்கமாக இருந்தது. தற்போதைய சிங்கள இன மத குண்டர் படைகள், தெற்கில் இனரீதியாக தூய சிங்கள ஈழத்தை உருவாக்கும் நோக்கில்(பல்லின,பலமத,பன்மைத் தன்மையான ஸ்ரீலங்கா எனும் கொள்கைக்கு விரோதமாக) சமாதானத்தை அழித்து, துயரமான மற்றொரு இன மத மோதலை உருவாக்கி, மூன்று வருடங்களுக்கு முன் முடிவடைந்த இனத்தை அடிப்படையாக கொண்ட துயரமான உள்நாட்டு யுத்தத்தை மீண்டும் ஏற்படுத்த தற்பொழுது வளர்க்கப்படும் முயற்சிகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்(மூலம்:kattankudyinfo.com )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.