......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 20 March 2013

கூட்டணியிலிருந்து விடுதலை சிறுத்தைகளும் விலகியது

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து நாங்களும் வெளியேறுகிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் அறிவித்துள்ளது.மத்திய அரசின் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திராவிட முன்னேற்றக்கழகம் கூட்டணியிலிருந்து விலகியுள்ள நிலையிலேயே விடுதலை சிறுத்தைகளின் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் மேற்கண்டவாறு அறிவித்தல்  கூறியுள்ளார். 

மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரி நாங்கள் வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்று ஐ.மு கூட்டணியில் இருந்து திமுக விலகியுள்ளது.

இதே காரணத்திற்காக தற்போது நாங்களும் கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் ஆதரவை வாபஸ் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒரு உறுப்பினர் மட்டுமே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/61071-2013-03-19-16-41-07.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE