-எம்.எஸ்.நூர்தீன்
முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனா அமைப்பினால் மேற்கொண்டுவரும் நடவடிக்கையினை கண்டித்து மட்டக்களப்பு மாநகர சபையின் இன்றைய அமர்வில் மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான் கறுப்பு பட்டியணிந்து சமூகமளித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் அமர்வு மேயர் சிவகீர்த்தா பிரபாகரன் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கூடியது.
இதன்போது மாநகர சபையின் உறுப்பினர் றம்ழான் கறுப்பு பண்டியுடன் காணப்பட்டார்.
சபை அமர்வை ஆரம்பித்த மேயர் சிவகீர்த்தா, மாநகர சபை உறுப்பினர் றம்ழான் கையில் கறுப்பு பட்டியணிந்து வந்தமைக்கான காரணத்தை சபைக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான் உரை நிகழ்த்தினார். இதன்போது,
"இலங்கை வாழ் முஸ்லிம்கள் அண்மை காலமாக பொது பல சேன எனும் சிங்கள அடிப்படைவாத அமைப்பினால் பல்வேறு பிரச்சினைக்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதனால், முஸ்லிம்கள் நிம்மதியாக தமது வணக்க வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத அச்ச நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்திற்கும் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கும் இடையில் உள்ள இறுக்கமான உறவை சீர்குலைக்க இந்த அமைப்பு முற்படுகின்றது. முஸ்லிம்களுடை மார்க்க அனுஷ்டானங்களில் பொது பல சேன எனும் இந்த அமைப்பு இன்று கைவைத்துள்ளது. இந்த நாட்டில் அனைத்து மதங்களுக்கும் தமது மதக் கடமைகளை செய்வதற்கு சுதந்திரமுண்டு.
இவைகளை புரிந்து யாராக இருந்தாலும் நடந்து கொள்ள வேண்டும். எனவே தான் இந்த பொது பல சேன அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிரக வேண்டுமென்று கட்டவிழ்த்து விட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு எதிராக எனது கண்டத்தை தெரிவிக்கின்றேன்.
அதேவேளை எனது எதிர்ப்பினை காட்டுமுகமாக இன்றைய மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் கறுப்பு பட்டியினை அணிந்து சபைக்கு சமூகமளித்துள்ளேன்" என்றார்.
இதன் பின்னர் கருத்து தெரிவித்த மேயர் சிவகீர்த்தா பிரபாகரன்,
"இந்த நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமையுடனும் ஐக்கியத்துடனும் வாழ்வதை மட்டக்களப்பு மாநகர சபை வலியுறுத்தி நிற்கின்றது" என்றார்.

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.