கூடங்குளம் அணு மின்நிலையத்தில் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதியிலிருந்து கதிரியக்க கசிவு ஏற்பட்டுள்ளதாகவே இந்த குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பில் இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் கசிவு ஏற்பட்டு அபாயகரமான பொருள் தீப்பற்றி எரிந்தமையினால் பலர் பலியாகிவிட்டதாக கடந்த இரு நாட்களாக குறுஞ்செய்திகள் மூலம் வதந்திகள் பரவின.
நெல்லை, குமரி மாவட்டங்களை சேர்ந்த பலருக்கு குறுஞ்செய்திகள் மூலம் வாந்திகள் பரவின இதனால் மக்கள் பெரும் பீதியடைந்திருந்தனர்.
ஆனால் இது திட்டமிட்டு பரப்படும் வதந்தி. எவ்விதமான கசிவும் ஏற்படவில்லை. அணு மின் நிலையம் இயக்கப்படாத நிலையில் எப்படி கசிவு ஏற்பட முடியும் என இந்திய அரசு மற்றும் இந்திய தூதரகங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையிலேயே கூடங்குளம் மின் நிலையத்துக்கு எதிரான இலங்கையை சேர்ந்த மக்கள் குழு ஒன்று அணு மின் நிலையத்தில் கசிவு ஏற்பட்டிருப்பதாகவும், இது தொடர்பிலான எச்சரிக்கைகளை காணவிடாது, கண்களை குருடாக்கும் இதற்கு இலங்கை அரசே பொறுப்பு கூறவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இதன் விளைவுகளால், பாதிக்கப்பட்ட இந்திய, இலங்கை மீனவர்கள், விவசாயிகள், வர்த்தக சமூகங்கள் இதற்கு எதிராக போராடுவதை தடுக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அந்த அமைப்பு, தெரிவித்துள்ளது.
எனினும், இந்தியாவில் உள்ள அனைத்து அணு மின் நிலையங்களும், கதிரியக்க கழிவுகளை கையாளும் திறன் கொண்டிருப்பதாகவும், கூடங்குளம் மின் கசிவு என்பது முற்றிலும் பொய்யான தகவல்கள் எனவும் இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது என்றும் அந்;த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம்:http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59876-2013-03-02-15-48-04.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.