இதன் அடிப்படையில் மாநகர சபையின் உறுப்பினர்களின் கையொப்பத்துடனான கோரிக்கை ஒன்றினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முன்வைப்பதும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இதே கோரிக்கையை வலியுறுத்தி நாட்டிலுள்ள ஏனைய மாநகர சபை உறுப்பினர்களினது கையொப்பங்களுடனான மேலுமொரு மகஜரை ஜனாதிபதியிடம் முன்வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பிரதமர் டி.எம்.ஜயரத்ன மற்றும் சிரேஷ்ட அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்க ஆகியோருக்கு அடுத்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக நிமல் சிறிபாலடி சில்வா உள்ளார். எனவே அவரையே பிரதமர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர்கள் தங்களது கோரிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.
(மூலம்:http://www.virakesari.lk/article/local.php?vid=3288 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.