......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 19 March 2013

'ஹலால்' இறுதி தீர்மானம் பௌசியின் கையில்

-றிப்தி அலி

ஹலால் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இரவு இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போதே ஹலால் விவகாரம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பல மணி நேரங்களாக இடம்பெற்ற இந்த கூட்டத்தில் ஹலால் உட்பட முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.வெளிநாட்டு உற்பத்தி பொருட்களுக்கு மாத்திரமே ஹலால் சான்றிதழ் வழங்குதல் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அண்மையில் அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது. ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையிலிருந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா முற்றாக ஒதுங்க வேண்டும் என முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

அத்துடன் வெளிநாட்டு உற்பத்தி பொருட்களுக்கு மாத்திரம் ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையையும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், ஹலால் தொடர்பிலான உப குழுவின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது.இதனால் ஹலால் தொடர்பில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரத்தினை சிரேஷ் அமைச்சர் என்ற வகையில் ஏ.எச்.எம்.பௌசியிடம் வழங்க அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளனர்.

சிரேஷ்ட அமைச்சர் பௌசியின் தலைமையில் முஸ்லிம் நாடாளுமன்ற கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு எடுக்கின்ற எந்தவொரு முடிவையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றது என்பதையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.

இந்த கூட்டத்தில் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். ஹலாலுக்கு எதிராக போராட அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்திருந்த நிலையிலேயே இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/61044-2013-03-19-11-35-05.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE