அக்கரைப்பற்றில் ஒருவர் இன்று சனிக்கிழமை மாலை வெட்டிக்கொலைச்செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹிஜிரா பாடசாலைக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட குரோதமே இந்த கொலைக்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் பலியானவரின் சடலம் அக்கரைப்பற்று தள வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் அக்கரைப்பற்று 6ம் பிரிவு வெள்ளப்பாதுகாப்பு வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரான முகமட் முஸ்தப்பா பகாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தலைமறைவாகியுள்ளவர் அதே வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய பசீர் என்றழைக்கப்படும் ஆப்தீன் தஸ்லீன் எனவும் தெரிவித்த பொலிஸார் சந்தேகநபரை தேடிவருவதாக தெரிவித்தனர்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/59875-2013-03-02-15-33-18.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.