-எஸ். எம். மும்தாஜ்
48 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கல்பிட்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் கல்பிட்டி நகரில் மூவர் இரண்டு கிலோ கேரள கஞ்சாவுடன் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் மேலும் 46 கிலோ கஞ்சா கல்பிட்டி லாம்பு தீவில் மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
புத்தளம் பிரதேசத்தில் இந்தளவு பெரும் தொகை கஞ்சா கைப்பற்றப்பட்டது இதுவே முதற் தடவை என பொலிசார் தெரிவித்தனர்.
ஒவ்வொன்றும் இரண்டு கிலோ எடையுடைய 24 பொதிகள் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இவற்றின் பெறுமதி சுமார் 84 இலட்சம் எனவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபர்கள் மூவரையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த பொலிசார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- See
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-47-44/59873-48-.html )

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.