......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 16 March 2013

'வேடுவர் உரிமையும் ஐ.நா தீர்மானத்தில் வேண்டும்'

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானத்தில், இலங்கையின் பழங்குடியின மக்களான வேடுவர்களின் உரிமைகள் குறித்தும் வலியுறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

'சவர்வைல் இண்டர்நாஷனல்' என்னும் சர்வதேச அமைப்பு ஒன்றே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் வேடுவர்களின் பாரம்பரிய வதிவிடங்கள் சிங்கள குடியேற்றவாசிகளால் அத்துமீறல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றது.

தமது பாரம்பரிய காடுகளில் தமது தேவைகளுக்காக வேட்டையாடுவதற்கு வேடுவர்கள் தடுக்கப்படுகின்றனர்.தமது உறைவிடங்களான காடுகளை அவர்கள் இழந்துள்ளதாகவும் கூறுகிற அந்த அமைப்பு, இது குறித்து இலங்கை அரசாங்கங்களால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் எதுவும் சரியாக நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறுகிறது.

இலங்கையில் தற்போதைய நிலைமைகளில் வேடுவ இனத்தவர்கள், வழமையான காடுகளை இழத்தல், பாரம்பரிய வதிவிட உரிமை, வேட்டையாடுவதற்கான உரிமை அகியவற்றை இழத்தல் என்பவற்றுடன், தமிழ் பகுதிகளில் வாழும் வேடுவர்கள் போரினால் ஏற்பட்ட பல பிரச்சினைகளையும் எதிர்கொள்வதாகக் கூறுகிறனர் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(மூலம்: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/60751-2013-03-14-17-36-14.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE