காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி பிரதேசத்தில் காலை 6மணிக்கு முன்பு மாடு அறுத்தார் எனும் குற்றச் சாட்டின் பேரில் இறைச்சி வியாபாரி ஒருவர் வெள்ளிக்கிழமை (8.3.2013)யன்று கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்த மாட்டு இறைச்சியையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
புதிய காத்தான்குடி பகுதியில் காலை 6 மணிக்கு முன்னர் மாடு அறுத்த இறைச்சிக்கடை வியாபாரியொருவரை கைது செய்த காத்தான்குடி பொலிசார் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மாட்டு இறைச்சியையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
இதன் போது கைப்பற்றப்பட்ட மாட்டு இறைச்சி மனித பாவனைக்கு உகந்தது என காத்தான்குடி பொதுச்சுகாதார பரிசோதகர்கள் வழங்கிய அறிக்கையை அடுத்து கைப்பற்றப்பட்ட இறைச்சியை குறித்த இறைச்சி வியாபாரியிடத்தில் வழங்குமாறு உத்தரவிட்ட நீதிபதி இறைச்சி வியாபாரியையும் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் குறித்த வழக்கை எதிர்வரும் 12ம் திகதி செவ்வாய்க்கிழைக்கு நீதிபதி ஒத்தி வைத்தார் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிசார் காலை 6மணிக்கு முன்னர் மாடுகளை அறுக்க கூடாது என அறிவித்துள்ளமை குறிப்படத்தக்கது(மூலம்: kattankudyinfo.com)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.