......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 16 March 2013

11 புதிய சட்டமூலங்களுக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு தாக்கல்

-எஸ்.எஸ்.செல்வநாயகம்

நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்படவுள்ள 11 சட்டமூலங்கள், அரசியலமைப்புக்கு அமைவாக இல்லையெனக் கூறி அவற்றை எதிர்க்கும் 15 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இறை முகாமைத்துவ பொறுப்புடைமை (திருத்தம்) எனும் பொருளிலான இந்த சட்டமூலத்தை எதிர்க்கும் மனுக்கள், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் வை.எம்.புஞ்சிபண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இந்த சட்டமூலங்கள் தொடர்பில் உயர்நீதிமன்றம் விசேட தீர்மானம் ஒன்றை வழங்க வேண்டும் என மனுதாரர்கள் கேட்டுள்ளனர். 

பெரும்பாலும் புதிய வரிமுறை தொடர்பான சட்டமூலங்கள் பதினொன்றை மார்ச் 8ஆம் திகதி அவையின் தலைவரினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60830-11-------.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE