......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 19 February 2013

ரஷ்யாவில் விழுந்த எரிகல் துண்டு உறைந்த ஏரியில் கண்டுபிடிப்பு

ரஷ்யாவில் கடந்த வெள்ளிக்கிழமை விழுந்து 1200 பேரை காயப்படுத்திய எரிகல் துண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் செலியபின்ஸ்க் பிராந்தியத்தி லேயே இந்த எரிகல் துண்டு கண்டுபிடிக்கப் பட்டதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ரஷ்யாவின் செபார்குல் என்ற நகருக்கு அருகில் இருக்கும் உறைந்த ஏரிப் பகுதியில் மேற்படி எரிகல் துண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எரிகல் துண்டில் 10 வீத இரும்புத் தாது இருப் பதாக யுரெல்ஸ் பெடரல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விக்டொர் கிரொஹொஸ்கி ரஷ்ய ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
இந்த எரிகல் தாக்கத்தால் 33 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டிருப்பதாக ரஷ்யா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதில் 200,000 சதுர கிலோ மீற்றர் பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதோடு பலர் வீட்டுக் ஜன்னல் கண்ணாடிகள் உடைத்து அதனால் காயத்திற்கு உள்ளாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் சேதங்களை சீர் செய்யும் மீட்பு நடவடிக்கையில் 9,000 பேரளவில் ஈடுபட்டுள்ளனர். இதில் மேற்படி எரிகல் துண்டு விழுந்ததாக நம்பப்படும் உறைந்த ஏரிப் பகுதியில் 6 மீற்றர் அகலம் கொண்ட பள்ளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இங்கு குறித்த எரிகல் துண்டு விழுந்திருக்கலாம் என தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இந் நிலையில் குறித்த பகுதியில் எரிகல் துண்டொன்றை கண்டுப்பிடித்ததாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த எரிகல் துண்டில் 10 வீத இரும்புத் தாது இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த எரிகல் பூமியின் வளிமண்டலத் திற்குள் நுழையும் முன் 10 தொன்கள் பாரம் கொண்டதாக இருந்ததாகவும் இது வினாடிக்கு 30 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்து சிதறியதாகவும் ரஷ்ய விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா, இந்த விண்கல் 17 மீற்றர் அகலம் மற்றும் 10,000 தொன் பாரமும் கொண்டதாக பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்ததாக குறிப்பிட்டுள்ளது.



(மூலம்:http://www.thinakaran.lk/2013/02/19/default.asp?fn=w1302193 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE