நேற்று அவ்வியக்கம் தேசிய கேட்போர் கூடத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஏற்பாட்டாளர் ஏற்பாட்டாளர் தம்பர அமில தேரர் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முஸ்லிம் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் நாட்டில் அதிகரித்து வருகின்றன. சர்வதேச சூழ்ச்சிகலுக்குள் சிக்குன்றிருக்கும் அரசு அதன் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்படுகின்றது.
சூடான் இரண்டாகப் பிரிக்கப்பட்டது போன்று இலங்கையையும் இரண்டாக பிரிக்க சதி மேற்கொள்ளப்படுகிறது.
வடக்கு கிழக்கை இணைத்து தமிழ் ஈழத்தை உருவாக்க வேண்டுமாயின் அதனை தீர்மானிக்கும் சக்தி முஸ்லிம்கள் தான்.ஏனெனில் கிழக்கு மாகாணத்தில் தலா 33 சதவீதமாக சிங்கள் தமிழ் மற்றும் முஸ்லிம்களின் இனப்பரம்பல் காணப்படுகின்றது. முஸ்லிம்களின் ஆதரவு எவருக்கு கிடைக்குமோ அவர்களே பெரும்பான்மையானவர்கள். எனவே தமிழ் ஈழத்தை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம்களே உள்ளனர்.
முன்னர் தமிழ், சிங்கள மக்களிடையே பிளவை ஏற்படுத்திய சர்வதேச சக்திகள் தற்போது சிங்கள் ,முஸ்லிம் மக்களிடையே மோதலொன்றை உருவாக்க முயற்சிக்கின்றது.
இதற்கமைய ஐக்கிய நாடுகள் சபை, பொதுநலவாய நாடுகள் அமைப்பு, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றினூடாக அந்த சர்வதேச சக்திகள் தமது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. யுத்தத்தினூடாக உருவாக்க முடியாத தமிழ் ஈழத்தை சிங்கள்,முஸ்லிம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்திப் பெறவேண்டும் என முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமது அரசியல் இருப்புக்களை தக்கவைத்துக்கொள்ள சர்வதேச அரசியல் பத்திரத்துக்கு அமைய அரசு செயற்படுவது வேதனை அளிக்கிறது.
முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் இனியும் தொடருமாயின் அல்கைதா உள்ளிட்ட சர்வதேச முஸ்லிம் அமைப்புக்கள் இலங்கையில் தலையிடவேண்டிய சந்தர்ப்பம் ஒன்று தோற்றம் பெறலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
(vidivelli)
(kdy)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.