ரஷ்யாவின் தென்பகுதியில் உள்ள யூரல் மலைத்தொடரின் அருகே விண்ணிலிருந்து தீச்சுவாலையுடன் விழுந்த எரிகல் ஒன்றிலிருந்து பயங்கர வேகத்தில் வீசி எறியப்பட்ட சிதறல்கள் பல இடங்களில் விழுந்து வெடித்ததில் 950க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து 1,500 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள செலியாபின்ஸ்க் பகுதியிலேயே விண்கல் விழுந்துள்ளதாகக் கூறப் படுகிறது.
விண்கல் விழுந்தநேரத்தில் மிகப்பெரிய வெடி சப்தம் கேட்டதாகவும் புகைமண்டலத்துடன் கூடிய தீப்பிழம்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஒரு ஒளிக் கீற்றாக எரிகல் காற்று மண்டலத்தில் சீறிச் செல்வதையும், அதன் வால் பகுதியில் பயங்கர வெளிச்சத்துடன் தீப்பிழம்பு வெடிப்பதையும் வீடியோ படங்கள் காட்டுகின்றன.
யூரல் மலைத்தொடர் பகுதியில் அமைந்துள்ள செல்யாபின்ஸ்க் என்ற ஊரில் அலையலையாய் வந்த எரிகல் சிதறல் மழையால் ஏற்பட்ட அதிர்வலையில் கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்தன, கார்களின் அலாரங்கள் அலர ஆரம்பித்தன.
என்ன நடக்கின்றது என்று பார்ப்பதற்காக வெளியில் ஓடிவந்த மக்களின் உடல்களில் கண்ணாடித் துகள்கள் பாய்ந்து காயங்கள் ஏற்பட்டுள்ளன.
எல்லோரும் பரபரப்பாக தொலைபேசியில் ஒரே நேரத்தில் பேச முற்பட, அந்தப் பகுதியில் கைத்தொலைபேசி மின் அலைச் சேவை பளு தாளாமல் சற்று நேரத்துக்கு செயலிழந்து போனது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.