......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 18 February 2013

சட்டபீட மாணவியின் கை துண்டிக்கப்பட்டதற்கு வைத்தியரின் கவனயீனமே காரணம்



வைத்தியர்களின் கவனகுறைவு காரணமாகவே சட்டபீட மாணவியின் இடது கையின் கீழ்பகுதி அகற்றப்பட்டுள்ளதாக விசேட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டபீட மாணவி அச்சலா பிரியதர்ஷிணியின் இடதுகை துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக சுகாதார அமைச்சரின் பணிப்புரையின் கீழ் நியமிக்கப்பட்ட விசேட குழு தனது அறிக்கையை சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கடந்த திங்கட்கிழமை கையளித்தது.

வைத்தியர்களின் அலட்சிய போக்கே மாணவியின் இடது கை துண்டிப்பிற்கு காரணமென அவ் அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இவர்களுக்கு எதிராக கடுமையான நடடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக, சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவின் பணிப்புரைக்கு அமைவாக, பொது மருத்துவ சேவை பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஆனந்த குணசேகர மற்றும் பல விசேட மருத்துவ  நிபுணர்கள் உள்ளடக்கிய மருத்துவ குழுவொன்றை சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜெயத்திலக்க நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ரஞ்சன் கஸ்தூரி)




தொழில் வாண்மையினரின் கவனயீனம்பற்றி ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை

-ஒலிந்தி ஜயசுந்தர

மருத்துவ, கல்வி, சட்ட துறைகளில் இடம்பெற்ற தொழில் வாண்மையினரின் கவனயீனம்பற்றி கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட மாணவர்கள், தாம் ஒரு ஆய்வை மேற்கொள்ளவுள்ளதாக நேற்று கூறியுள்ளனர்.

மருத்துவ கவனயீனம் காரணமாக தனது இடது கையை இழந்துவிட்ட தமது சக மாணவியான அச்சலா பிரியதர்ஷினி போன்று, தொழில்வாண்மையினரின் கவனயீனம் காரணமாக பாதிக்கப்பட்ட பலர்  உள்ளனர் என அவர்கள் கூறினர்.

 'அச்சலாவுக்கான இயக்கம் தொடங்கியதிலிருந்து மருத்துவர்களின் கவனயீனம் காரணமாக உயிரிழந்தவர்கள், அங்கவீனமானவர்கள் பலர் இது தொடர்பில் தமக்கு முறையிட்டுள்ளனர்.

தமது கவனயீனமான செயல்களுக்கு இவர்கள் பொறுப்பாக்கப்படாமல் விடப்பட்டதனால் கவனயீனம் அதிகரத்து செல்கின்றது' என்று தெரிவித்தனர்

தொழில் வாண்மையினரின் கவனயீனத்துக்கு அவர்கள் பொறுப்பாக்கப்படுவதற்கும் இவ்வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்கவும் நாம் ஒரு அமைப்பை உருவாக்கவும் விரும்புவதாக சட்ட மாணவர் சங்கத்தின் பேச்சாளர்; ஜயந்த தெஹியத்தாகே கூறினார்.

அச்சலா, இந்;த கவனயீனம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பாரா என்பது பற்றி இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.


-ஒலிந்தி ஜயசுந்தர

மருத்துவ கவனயீனம் காரணமாக இடது கையை இழந்துவிட்ட அச்சலா பிரியதர்ஷினிக்காக சட்ட மாணவர் சங்கம் எடுக்கப்பபோகும் சட்ட நடவடிக்கைக்கு தாம் ஆதரவு வழங்கவுள்ளதாக அச்சலா பிரியதர்ஷனியின் சகோதரன் தெரிவித்துள்ளார்.

'அச்சலாவின் இடது கை காரணமின்றி துண்டிக்கப்பட்டமைக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக எந்தவித சட்டநடவடிக்கையும் எடுக்கபோவதில்லை. ஆனால், அதற்காக பாடுபடும் சட்ட மாணவர் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவு அளிக்கப்போகிறோம்' என அச்சலா பிரியதர்ஷனியின் சகோதரனான டபிள்யூ.கே.தர்ஷன திலகரத்ன டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார்.

அச்சலா இடது கையை காரணமின்றி இழந்தமையை ஆராய்வதற்காக விசேட குழு நியமிக்கபட்டமை தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் அவரது கை காரணமின்றி துண்டிக்கப்பட்டமையை பத்திரிகைகளின் ஊடாகவே தாம் அறிந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'விசேட மருத்துவ குழுவின் அறிக்கை தொடர்பில் எமக்கு அறிவிக்கப்படவில்லை.  இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால், நாங்கள், சட்ட மாணவ சங்கத்தினரின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்க உள்ளோம்.

இச்சம்பவத்தினால் அச்சலா மிகவும் மனமுடைந்து போயுள்ளாள். அவள் இடதுகை முழுமையாக குணமடையவில்லை. அவள் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றாள்' என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


(http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/59010-2013-02-16-04-32-44.html
)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE