......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 6 February 2013

பிராந்திய ஸ்திரமின்மையால் ஹமாஸ் தலைமை தேர்வில் தாமதம்


பிராந்திய நாடுகளின் ஸ்திரமில்லா நிலை காரணமாக ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக ஹமாஸ் ஹமாஸ் அமைப்பு திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பு தனது இரகசியவாக்கெடுப்புகளை கடந்த ஆண்டு நடத்தியதாக நம்பப்படுகிறது. எனினும் அதனது உயரிய சபையான பொலிட் பீரோவுக்கான உறுப்பினர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. “பொலிட் பீரோ தேர்தலுக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப் படவில்லை” என காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான சலாஹ் அல் பார்தவீல் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் தற்போதைய தலைவர் காலித் மிஷால் அந்த பதவியில் தொடர்ந்து நீடிக்க பிராந்திய நாடுகள் அழுத்தம் கொடுப்பதாக வெளியாகும் செய்தியை பார்தாவீல் மறுத்துள்ளார்.
கடந்த 17 ஆண்டுக ளாக ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவராக இருக்கும் காலித் மிஷால் அந்த பதவியிலிருந்து விலகப் போவதாக கடந்த செப்டம்பரில் அறிவிக்கப்ப ட்டிருந்தது. ஆனால் மிஷால் தொடர்ந்தும் தனது பதவியில் நீடிப்பதாக பார்தாவீல் கூறினார். இறுதி முடிவை எடுக்கும் சக்திவாய்ந்த பொலிட் பீரோவில் மொத்தம் 15 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE