ஆசியாவிலுள்ள சிறந்த நூறு பல்கலைக்கழகங்களுக்குள் கிழக்குப் பல்கலைக்கழகத்தையும் உள்வாங்க அனைவரும் சிறப்பாக உழைக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச தெரிவித்தார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள விஞ்ஞான பீடத்தின் விலங்கியல் துறை கட்டிடத்தொகுதியை திறந்துவைத்த பின்னர் அங்கு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய ஜனாதிபதி ஆசியாவிலுள்ள சிறந்த நூறு பலக்லைக்கழகங்களுக்குள் இந்த கிழக்கு பல்கலைக்கழகமும் சேர வேண்டுமாக இருந்தால் கடினமாக உழைக்க வேண்டும்.
குறுகிய சிந்தனைகளை களைந்து நமது நாடு என்ற சிந்தனையுடன் நாம் இந்த நாட்டிற்கு பங்காற்ற வேண்டும். நாட்டிற்கு தேவையான நல்ல பட்டதாரிகளை உருவாக்க வேண்டும். அதற்காக இந்த கிழக்கு பல்கலைக்கழகமும் பணியாற்ற வேண்டும்.
நாடு எதிர் நோக்கும் எந்த சவாலுக்கும் முகம் கொடுக்க கூடிய தலைவர்களை உருவாக்கும் பல்கலைக் கழகமாக திகழவேண்டும்.
குறுகிய சிந்தனைகளுக்குள் சிக்குண்டு போகாமல் நமது நாடு நமது நாட்டிற்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற சிந்தனையுடன் நாம் செயலாற்றவேண்டும்.
கடந்த காலங்களில் தீய சக்திகள் இந்த கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன ரீதியான குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தனர் எனவும் தெரிவித்தார்.
(kattankuduinfo)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.