......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 6 February 2013

கொழும்பில் எதிர்க்கட்சி எதிர்ப்பு இயக்க கட்சிகளின் புரிந்துணர்வு நிகழ்வு


எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கத்தில் இடம்பெறும் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு இடையிலான உடன்பாடுகள் மற்றும் புரிந்துணர்வுகளை நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வில் எதிர்க்கட்சி எதிர்ப்பியக்கத்தில் பங்குபற்றும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முன்னணி பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கத்தில் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிச கட்சி, நவ சம சமாஜக் கட்சி, நவ சிஹல உறுமய, முஸ்லிம்-தமிழ் கூட்டணி, றுகுணு மக்கள் கட்சி, ஐக்கிய ஜனநாயக முன்னணி, மௌபிம ஜனதா பெரமுன ஆகிய கட்சிகளும் சுதந்திரத்திற்கான மேடை அமைப்பும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE