......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 11 February 2013

செவ்வாயில் துளையிட்டது கிய+ரியாசிட்டி


செவ்வாயில் ஆய்வு மேற்கொள்ளும் கியூரியாசிட்டி இயந்திரம் பகுப்பாய்வுக் கான மாதிரியை பெற அங்குள்ள பாறையில் முதல் முறையாக ஆழமான துளையிட்டுள்ளது.

இதன் மூலம் செவ்வாயில் 6 சென்றிமீற்றர் ஆழத்திற்கு துளையிட்டுள்ள கியூரியாசிட்டி அதிலிருந்து சாம்பல் நிறத்திலான மாதிரியை பெற்றுள்ளது.
இந்த மாதிரி பகுப்பாய்வுக்காக கியூரியாசிட்டியில் அமைக்கப்பட்டிருக்கும் ஆய்வு கூட்டத்திற்கு விரைவில் அனுப்பப்படவுள்ளது. இதற்கு முன்னர் இந்த மாதிரி பற்றி கியூரியாசிட்டி பரிசோதனை செய்யவுள்ளது.
செவ்வாயில் கியூரியாசிட்டி இயந்திரம் துளையிட்டது வரலாற்றில் இடம்பிடித் துள்ளது. பூமிக்கு அப்பால் வேற்று உலகம் ஒன்றில் இவ்வாறு துளையிடப்பட்டது இது முதல் முறையாகும்.
இது ஒரு மகத்தான சாதனை என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா அறிவித்துள்ளது. “கியூரியாசிட்டி கடந்த ஆகஸ்ட்டில் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது தொடக்கம் இது பாரிய சாதனையாகும்.
அமெரிக்காவுக்கு மற்றுமொரு பெருமையான தினமாகும்” என கியூரியாசிட்டி செயற்பாட்டு குழுவின் பிரதான விஞ்ஞானி ஜோன் கிரொட் சிங்கர் குறிப்பிட்டார்.
கியூரியாசிட்டி ஆய்வு மேற்கொண்டு வரும் செவ்வாயின் கேல் பள்ளத்தாக்கின் மையப்பகுதியிலேயே இந்த துளை இடப்பட்டுள்ளது.
கியூரியாசிட்டி செவ்வாயில் உயிர்வாழ தகுதியான அதன் கடந்த கால சூழல் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதில் தற்போது துளையிட்டு பெறப்பட்டுள்ள மாதிரிகள் மூலம் அது தொடர்பில் முக்கிய ஆதாரங்கள் கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கியூரியாசிட்டி மூலம் செவ்வாய் நிலத்தில் துளையிடுவதற்கு விஞ்ஞானிகள் ஆறு மாதங்கள் எதிர்பார்த்திருந்தனர். இறுதியில் கியூரியாசிட்டியின் 2.2 மீற்றர் நீளமுள்ள கைப்பகுதி மூலம் செவ்வாய் பாறையில் துளையிடப்பட்டுள்ளது.
இவ்வாறு துளையிட முன்னர் கடந்த வாரம் கியூரியாசிட்டி இயந்திரத்தின் மூலம் செவ்வாயின் மேற்பரப்பில் அழுத்தமாக தாக்கி பரிசோதிக்கப்பட்டது. அது வெற்றி அளித்ததைத் தொடர்ந்தே துளையிடும் பணி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும் செவ்வாய் துளையிட்டு ஆய்வு செய்யும் பாறையை தேர்வு செய்வதற்கு கியூரியாசிட்டி கடந்த காலத்தில் ஒரு சில வாரங்களை எடுத்துக் கொண்டது. பின்னர் “ஜோன் கிளைன்” என்ற பெயர் சூட்டிய பாறை தேர்வு செய்யப்பட்டது.
இந்நிலையில் மேற்படி துளையிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளின் மூலம் செவ்வாயின் இரசாயன மற்றும் கனியங்கள் குறித்து கண்டறியப்படவுள்ளது. அத்துடன் வித்தியாசமான கார்பன் இரசாயன மூலக்கூறுகள் பற்றியும் இந்த மாதிரி ஊடாக கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.



(http://www.thinakaran.lk/2013/02/11/?fn=w1302112)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE