......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Wednesday, 6 February 2013
துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னர் முதன் முறையாக ஊடகத்துக்கு பேட்டியளித்த மலாலா!
பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்டு பின்னர் லண்டனில் மேலதிக சிகிச்சைகளைப் பெற்று குணமாகிவரும் மலாலா முதன் முறையாக ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
பெண் கல்வியை ஊக்குவித்த மலாலாவை தலிபான்கள் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 9ம் திகதி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
மலாலாவுக்கு இலவச உயர்சிகிச்சை அளிக்க பிரிட்டன் அரசு முன்வந்ததையடுத்து லண்டனில் உள்ள ராணி எலிசபத் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 3 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றது.
லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக பள்ளியில் மலாலாவின் தந்தைக்கு வேலை வழங்கவும் பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி உத்தரவிட்டார்.
தற்போது, லண்டனில் உள்ள 'வெஸ்ட் மிட்லேண்ட்ஸ்' என்ற இடத்தில் வசித்து வரும் 15 வயதான மலாலாவின் பெயர் உலகின் உயரிய விருதான நோபல் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டுக்கு பின்னர் முதன்முறையாக ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள மலாலா கூறுகையில், இன்று என்னை நீங்கள் உயிருடன் பார்க்க முடிகிறது.
நாளுக்கு நாள் நான் நலமடைந்து வருகிறேன். உங்களை எல்லாம் பார்க்க முடிகிறது என்றால், அதற்கு காரணம் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என்று உலகமக்கள் அனைவரும் எனக்காக செய்த பிராத்தனை தான். உங்களுடைய பிராத்தனையின் பலனாக கடவுள் எனக்கு புதிய வாழ்க்கையை தந்துள்ளார்.
இது என்னுடைய இரண்டாவது வாழ்க்கை, இந்த வாழ்க்கையின் மூலம் நான் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன். ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு பெண்ணும் கல்வியறிவை பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இதற்காக மலாலா நிதி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளேன் என்றும் கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்புக்கு பாகிஸ்தானில் இருந்து மட்டும் ரூ. 53 கோடி நிதி சேர்ந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.