......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 26 February 2013

சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட டெசோ தீர்மானம்

சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி முற்றுகையிடுவதற்கு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.கருணாநிதி தலைமையிலான டெசோ கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

டெசோ ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் -இடம்பெற்றது. தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின், தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன், தி.க.தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் டெசோ அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் வரும் மார்ச் 5ஆம் தேதி சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன. 


(மூலம்:http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59566-2013-02-25-15-51-22.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE