......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 26 February 2013

கல்முனைக்குடி கடற்கரை பள்ளிவாயல் வீதி புனரமைக்கப்படவுள்ளது

untitled-எம்.எம்.ஏ.ஸமட்-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனின் வேண்டுகோளுக்கிணங்க கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளிவாசல் வீதி கடந்த 10 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாண  வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ் உதுமாலெவ்வையின் நிதி ஓதுக்கீட்டினால் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

மிகவும் பிரசித்திபெற்ற இவ்வீதி அரசியல் தலையீடுகள் காரணமாக கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக மழைகாலங்களில் வெள்ளம் நிறைந்தும் வெயில் காலங்களில் குன்றும்குழியுமாக அபிவிருத்தி செய்யப்படாது காணப்பட்டு வந்துள்ளது. இதனால்இவ்வீதியைப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தும் பாதசாரிகளும் வாகன ஓட்டுனர்களும் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கிள்ளனர். குறிப்பாக வருடந்தோரும் நடைபெறும் கடற்கரைப் பள்ளிவாசல் கொடியேற்ற விழாக் காலங்களின் போது இவ்வீதியினூடாக  தினந்தோரும் நூற்றுக்கதியமான வாகனங்களும் நாட்டின் பல பிரதேசங்களிலிருந்தும் வரும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் மிகவும் அசௌகரியத்துடனே பயணத்து வந்துள்ளனர்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி கடற்கரைப்பள்ளி கொடியேற்ற விழா ஆரம்பிக்கவுள்ள நிலையில் அதற்கு முன்னர் இவ்வீதியை அபிவிருத்தி செய்து முடிக்க உத்தேசித்துள்ளதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிடார்.
39 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள இவ்வீதி அபிவிருத்திக்கான அங்குராப்பண விழா எதிர்வரும் புதன்கிழமை(27) மாலை 4 மணிக்கு கல்முனைக்குடி கடற்கரைப்பள்ளிவாசல் வீதியிலுள்ள ஆட்டோ பஸார் சந்தியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ்வங்குராப்பண விழாவில் கிழக்கு மாகாண சபை அமைச்சரவைப் பேச்சாளரும் வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெவ்வை பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் கௌரவ அதிதியாகவும் கல்முனை மாநகர சபை மேயர் சிறாஸ் மீராசாஹிப் சிறப்பு அதிதியாகவும் மற்றும் கல்முனை பிரதேச செயலாளர் அம்பாறைப் பிராந்திய வீதி அபிவிருத்திக்கான சிரேஷ்ட பொறியிலாளர் உட்பட பல அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளதாக விழா ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்தனர்.



(மூலம்: kattankudyinfo.com)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE