......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 24 February 2013

புறநகர்ப் பகுதிகளிலும் அரச நிறுவன சேவைகள் விஸ்தரிக்கப்படும்: ஜனாதிபதி

-சீ.எம்.ரிஃபாத்

அரச நிறுவனங்கள் ஆகியவற்றின் சேவைகளையும் புறநகர்ப் பகுதிகளுக்கு விஸ்தரிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் பிரதேச பாகுபாடின்றி அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதனடிப்படையில் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அரச திணைக்களங்கள், அரச நிறுவனங்கள் ஆகியவற்றில் சேவைகள் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கண்டி, பள்ளேகலையில் சுமார் 92 கோடி ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மத்திய மாகாண சபைக்கான புதிய கட்டடத் தொகுதியை சம்பிரதாயபூர்வமாக இன்று சனிக்கிழமை திறந்துவைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பொது மக்கள் தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் அரச நிறுவனங்களை நாடுவதாக குறிப்பிட்டார்.

மக்களின் பிரச்சினைகளை உரிய வகையில் அடையாளம் கண்டு அவற்றுக்கு சிறந்த தீர்வினை வழங்கி, முகமலர்ச்சியுடன் அவர்கள் திரும்பிச் செல்லக்கூடிய நிலைமையை அரச ஊழியர்கள் உருவாக்கவேண்டும் என இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தினார்.

30 வருடகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், நாட்டில்  பல்வேறு அபிவிருத்திப் பணிகளை பாரபட்சமின்றியும், பிரதேச வேறுபாடின்றியும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதன் ஒரு கட்டமாகவே அண்மையில் யாழ்ப்பாணத்திலும், கண்டியிலும் வைத்தியசாலை கட்டடத் தொகுதிகளை தாம் திறந்துவைத்ததாக ஜனாதிபதி கூறினார்.

கண்டியில் நிலவுகின்ற நெரிசலைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ், அரச அலுவலகங்கள், திணைக்களங்கள் ஆகியவற்றின் சேவைகளை புறநகர் பகுதிகளுக்கு கொண்டுசெல்லும் வகையில் இந்த புதிய கட்டடம் பள்ளேகலையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

(மூலம்:http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/59460-2013-02-23-13-01-17.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE