சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் நடுவராக உள்ள குமார் தர்மசேனவை வெளியேற வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆசிய தடகளப் போட்டிகளை நடத்த முடியாது என்று தமிழக அரசும் அறிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த குமார் தர்மசேன நடுவராக நியமிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து இன்று காலை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட முயன்றனர்.
அவர்களை பொலிஸா தடுத்து நிறுத்தி கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=3172 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.