......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 6 February 2013

பங்களாதேஷ் இஸ்லாமிய தலைவருக்கு ஆயுள் தண்டனை


பங்களாதேஷின் பிரதான இஸ்லாமிய கட்சியான ஜெமாத் இ இஸ்லாமின் முன்னணி தலைவரான அப்துல்காதர் முல்லாஹ் மீதான யுத்த குற்றச்சாட்டுக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான சுதந்திர போராட்டத்தின் போது இடம்பெற்ற யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தும் நீதிபதிகள் குழு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
எனினும் முல்லாஹ் தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ளார். பங்களாதேஷ் சுதந்திர போராட்டத்தின் போது மூன்று மில்லியனுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக உத்தியோகபூர்வ தகவல்கள் குறிப்பிடுகின்றன.
எனினும் யுத்த குற்றச்சாட்டு அரசியல் பின்னணி கொண்டது என விமர்சித்துள்ள ஜெமாத் இ இஸ்லாம் ஆதரவாளர்கள் கடந்த திங்கட்கிழமை தலைநகர் டாக்காவில் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதில் ஜெமாத் இ. இஸ்லாமின் மேலும் பல தலைவர்கள் உட்பட 12 பேர் மீது யுத்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
64 வயதான அப்துல் காதர் முல்லாஹ் ஜமாத் இ இஸ்லாமின் துணை பொதுச் செயலாளர் ஆவார். இவர் பங்களாதேஷ் சுதந்திர போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயற்பட்டவராவார்.



(thinakaran)


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE