-ஹனீக் அஹமட்
மாணவர்கள் சமூகமளிக்காமை காரணமாக இன்றைய தினமும் பொத்துவில் சின்ன உல்லை அல் - அக்ஷா வித்தியாலயத்தில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் எவையும் இடம்பெறவில்லை.
தமது பாடசாலையிலிருந்து இடமாற்றப்பட்ட 15 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்புமாறு கோரி பாடசாலை சமூகத்தினர் கடந்த வியாழக்கிழமை கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டதோடு, தமது கோரிக்கை நிறைவேற்றுப்படும் வரையில் - பாடசாலைக்கு தமது பிள்ளைகளை அனுப்புவதில்லை என பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர்.
பெற்றோர்களின் மேற்படி தீர்மானத்துக்கமைய அல்-அக்ஷா வித்தியாலயத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாணவர்கள் எவரும் சமூகமளிக்கவில்லை. ஆயினும், வழமைபோல் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகை தந்திருந்தனர்.
இதேவேளை, இன்றைய தினம் அறுகம்பை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் புலானாய்வுப் பிரிவினர் - பாடசாலை அதிபரைச் சந்தித்து, மாணவர்கள் சமூகமளிக்காமைக்கான கேட்டறிந்து கொண்டதாக அறிய முடிகிறது.

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.