......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 26 February 2013

வவுனியாவில் 4 பொலிஸார் பணியிலிருந்து இடைநிறுத்தம்

-நவரத்தினம் 

வவுனியாவில் நான்கு பொலிஸார் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, கூமாங்குளத்தில் உள்ள மதுபானசாலை ஒன்றில் இளைஞர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நான்கு பொலிஸாரே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கூமாங்குளத்தில் உள்ள மதுபானசாலையில் வைத்து பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் பொலிஸார் இருவரும் இளைஞர்கள் இருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கடமை நேரத்தில் பொலிஸார் வெளியில் சென்றமை மற்றும் இளைஞர்களுடன் மது நிலையத்தில் தகராறில் ஈடுபட்டமை என்பவற்றை கருத்தில் கொண்டே  இவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன. 


(மூலம்:http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/59599--4-.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE